பிரதமர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்! நாமல்

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Mayuri Jul 25, 2024 04:52 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மாவத்தையில் நேற்று சந்தித்து, எதிர்வரும் அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். 

பிரதமர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்! நாமல் | Namal Seeking The Post Of Prime Minister

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்திருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW