முத்துநகர் விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி வீதிக்கிறங்கிய பொதுமக்கள்!

Sri Lankan Tamils Trincomalee Eastern Province
By Shalini Balachandran Sep 17, 2025 10:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதாக கூறி கவனயீர்ப்பில் ஈடுபட்டடுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (17)திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே உட்பட விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள், முத்து நகர் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை மீட்டு தருமாறு போராட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டிருந்தனர்.

உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பொய்கள் வேண்டாம்

''விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு, நெல் வயல்கள் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, பொய்கள் வேண்டாம், இதன் போது கருத்துரைத்த விவசாயிகள் தற்போது மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விவசாய செய்கைக்கான தயார் நிலைபடுத்த வேண்டியுள்ளது.

முத்துநகர் விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி வீதிக்கிறங்கிய பொதுமக்கள்! | Muthunagar Agricultural Land Protest

மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நிலங்களை தருவதாகம் சோளர் திட்டம் இல்லாத நிலங்களில் விவசாய செய்கை ஆரம்பிக்க முடியும் என கூறிவிட்டு தொடர்ந்தும் கம்பனிகளுக்கு விளை நிலத்தை வழங்குகின்றனர் .

குறித்த போராட்டத்தை தொடர்ந்தும் உண்ணாவிரதமாக நடாத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்தும் பொறுப்பை எம்மிடம் ஒப்படையுங்கள்: ரவிகரன் எம்.பி சவால்

சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்தும் பொறுப்பை எம்மிடம் ஒப்படையுங்கள்: ரவிகரன் எம்.பி சவால்

நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !

நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !