ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

Ampara Batticaloa Srilanka Muslim Congress Eastern Province General Election 2024
By Laksi Oct 10, 2024 06:31 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்சியானது “மரச்” சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்தோடு, ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

வேட்புமனு தாக்கல்

இதேவேளை, இலங்கை மக்கள் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நிறைவடைந்துள்ளதுடன் 10 பேரும் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம் | Muslim Congress Resolves To Contest Alone In Batti

இதனையடுத்து, இன்றையதினம் (10) வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிந்தவூர் - MA தாஹிர், சம்மாந்துறை - ILM. மாஹிர், கல்முனை - ரிஸ்லி முஸ்தபா, சாய்ந்தமருது - ALM. சலீம், அட்டாளைச்சேனை - MA. அன்சில், அட்டாளைச்சேனை - AK.அமீர், அக்கறைப்பற்று - SM. சபீஸ்,பொத்துவில் - முனாஸ்,மருதமுனை - S.ஹமீட் இறக்காமம் - முனாஸ் ஆகியோர் வேட்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW