அலி சப்ரிக்கு பிடியாணை: வெளியான காரணம்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிடியாணை புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்னவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினரை எதிரியாக குறிப்பிட்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இதற்கு முன்னரும், நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வருடம் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |