மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை வெளியாகவுள்ள அறிவிப்பு

Mahinda Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sagara Kariyawasam
By Mayuri Aug 02, 2024 04:17 AM GMT
Mayuri

Mayuri

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றது.

சந்திப்பின் பின் தெரிவிக்கப்பட்ட விடயம்

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை வெளியாகவுள்ள அறிவிப்பு | Motu Party Presidential Candidate

அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW