திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Accident
By Kiyas Shafe Apr 15, 2025 09:08 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை(Trincomalee) ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து, நேற்று திங்கட்கிழமை(14) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

மேலதிக விசாரணை 

வீதியால் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது என தெரியவந்துள்ளது.

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி | Motor Bike Accident At Trincomalee

விபத்தில் உயிரிழந்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த நபரின் இறந்த உடல் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிப‌தி அநுர‌வுக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு

ஜனாதிப‌தி அநுர‌வுக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு

பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery