ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு

Sri Lanka Money
By Mayuri Oct 11, 2024 10:49 AM GMT
Mayuri

Mayuri

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இடைக்கால கொடுப்பனவு

இந்த கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு | Monthly Payment To Pensioners From Next Week

இடைக்காலக் கொடுப்பனவான 3000 ரூபா அக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW