குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடம் முதல்181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதல் தவணை தாமதமாகத் தொடங்குவதால், அரசுப் பாடசாலைகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனக்களில் பாடசாலைகளில் மாணவர்களில் 210 நாட்கள் வருகைத் தேவை இருப்பினும் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
கல்வி அமைச்சு
கல்வி அமைச்சு அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்யும் வகையில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முதல் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் நடைபெறும்.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டிற்கான தவணை தொழில்நுட்ப ரீதியாக ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |