பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காகவே என்னை அர்ப்பணித்தேன் -அமைச்சர் சரோஜா சாவித்திரி

Sri Lanka Crime
By Vinoja May 11, 2026 04:32 PM GMT

பிக்குவால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்காக நிபந்தனையின்றி செயற்படுவேன் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முறைப்பாடு செய்யப்படும் ஒவ்வொரு சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்பட NPP அரசு வாய்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காகவே என்னை அர்ப்பணித்தேன் -அமைச்சர் சரோஜா சாவித்திரி | Minister Paulraj Said She Stand For The Girl

குறித்த சம்பவத்தில் பொலிஸாருக்கோ அல்லது பிக்குவுக்கு சார்பாக செயற்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காகவே என்னை அர்ப்பணித்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முடிந்தவரை தலையிடுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளைப் பாதுகாக்கத் தான் முன்நிற்பதாகவும், சட்ட அமுலாக்கத்தில் எந்தவொரு தரப்பும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்படாது என்பதை உறுதி செய்வேன் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.