கர்நாடக சங்கீதப்போட்டியில் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் சாதனை படைத்த மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த பாராட்டு நிகழ்வு நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் நேற்று காலை நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசை போட்டிகளில் பங்குபற்றியிருந்த மாணவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
முறையான பயிற்றுவிப்பும் சாதனையும்
மேலும், அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும், ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும், திருப்புகழ் தனியிசையில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
இச்சாதனையினை நிகழ்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் சாந்தினி தர்மநாதனே குறித்த மாணவர்களை பயிற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |