173 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு விமானம் பயணம் செய்து கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியுள்ளது.
இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வெளிவந்து சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தின் போது விமானத்தில் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.