தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொது சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) தந்தை செல்வா அரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பொது சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் கே.டி. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
கைச்சாத்திட்டோர்
மேலும், ஜனநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் அதன் தலைவர் வேந்தன், பசுமை தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்தா. புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில் பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் நிலாந்தன், வசந்தராசா, ஆய்வாளர் யசீந்திரா உட்பட பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்நிகழ்வில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் பொது சபைகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |