காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விவகாரம்: டக்ளஸ் - ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு

Colombo Douglas Devananda Sri Lanka
By Harrish Aug 09, 2024 10:40 AM GMT
Harrish

Harrish

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று முன்தினம்(06) மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அட்டாளைச்சேனை, கப்பலடி கடற்றொழிலாளர் துறையில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் திகதி கடலுக்கு கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன ஐ.எல்.அகமது இர்பான், கே.ஆர்.நிஸ்பர் ஆகியோர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சஜித்துடன் இணைந்த அர்ஜூன

சஜித்துடன் இணைந்த அர்ஜூன

காணாமல் போன கடற்றொழிலாளர்கள்

இந்த மாதம் 02ஆம் திகதி தமிழ் நாட்டில் இருந்து வெளியான செய்தியில் நாகப்பட்டினப் பகுதியில் இலங்கை கடற்றொழிலாளரான ஐ.எல்.அகமது இர்பான் கரை சேர்ந்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த கடற்றொழிலாளரை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர ரீதியில் இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விவகாரம்: டக்ளஸ் - ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு | Meeting Between Douglas Rauff Hakeem

இதேவேளை, கடந்த மாதம் 07ஆம் திகதி பருத்தித் துறையில் இருந்து இயந்திரப் படகில் கடற்றொழிலுக்குச் சென்ற எம்.எஸ்.முஸ்தகீம் (அட்டாளைச்சேனை), என். குணபாலசிங்கம், ஏ.கே.பீ.பிரமேசிரி, ஏ.ராமகிருஷ்ணன் ஆகிய கடற்றொழிலாளர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், அட்டாளைச்சேனையில் இருந்து தமிழ் நாட்டில் கரை சேர்ந்துள்ள கடற்றொழிலாளர் ஐ.எல்.அகமது இர்பானை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர ரீதியிலான ஏற்பாடுகளை இங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்படும் எனவும், பருத்தித் துறையில் இருந்து காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ஏற்கனவே பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் இதுவரை அம்மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காமல் உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் விவகாரம்: டக்ளஸ் - ரவூப் ஹக்கீம் இடையில் சந்திப்பு | Meeting Between Douglas Rauff Hakeem

மேலும், அந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பையும் கலந்து கொண்டுள்ளனர்.

உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சுமந்திரனின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சுமந்திரனின் நிலைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW