நோன்பு பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வில் கைகலப்பு (Photos)
புத்தளம் நகரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வில் நிர்வாகிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
நோன்பு பெருநாளை முன்னிட்டு புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தலைமையில் புத்தளம் இஜித்துமா மைதானத்தில் நேற்று(23.04.2023) மாலை விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளது.
பார்வையாளர்களுக்கு இடையில் கைகலப்பு
இதன்போது பார்வையாளர்கள் மைதானத்திற்கு உள்ளே நுழைந்தமையினால் நிர்வாகிகள் பார்வையாளர்களை கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
பரிசில்கள் வழங்கி வைப்பு
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எமெஸ்.பி ஹேரத் கலந்து கொண்டதுடன் அதிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் போட்டிகள், மாட்டு வண்டி பந்தைய போட்டிகள் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும் கைகலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு மாத்திரம் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




