டொனால்ட் ட்ரம்பிற்கு கிடைத்த நோபல் பரிசு!

Donald Trump United States of America Venezuela Nobel Prize
By Fathima Jan 16, 2026 04:57 AM GMT
Fathima

Fathima

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தாம் பெற்ற நோபல் பரிசு பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கியதாக, மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ, நேற்று(15) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

நோபல் பரிசு

இந்தச் சந்திப்பின் போது, வெனிசுலா மக்களின் விடுதலைக்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்பிற்கு கிடைத்த நோபல் பரிசு! | Maria Corina Machado Donald Trump

வெனிசுலாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, மச்சாடோவை "துணிச்சலான பெண்" என்று பாராட்டிய போதிலும், தற்போதைய நிலையில் வெனிசுலாவை வழிநடத்த அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று ட்ரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.