தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Rukshy
ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி தேர்தலில் ஈடுபடக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |