சுவனத்தில் நபியவர்களுடன் வாழ விரும்பியவர்
ஹஜ்ரத் ரபீஆ(ரலி) அவ்கள் கூறுவதாவது,
நான் இரவு நேரங்களில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்து தஹஜ்ஜத் தொழுகைக்கு உளுச் செய்வதற்காக தண்ணீர், மிஸ்வாக், முஸல்லா போன்ற தேவையான பொருட்களை நபியவர்களுக்கு தயார் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் என்னுடைய பணிவிடையை கண்டு மகிழ்ச்சியடைந்து ”உமக்கு விருப்பமானதை என்னிடம் கேட்பீராக!” என்று கூறினார்கள்.
அப்பொழுது நான், சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன் என்று கூறினேன்.

வேறு ஏதாவது உமக்கு வேண்டுமா? இதுமட்டும் போதுமா? எனக் கேட்டார்கள். இதுமட்டும் தான் என்னுடைய நோக்கம், வேறு எதுவும் எனக்கு வேண்டாம் என நான் கூறினேன்.
நல்லது அவ்வாறானால் அதிகமாக சுஜூதுக்களை கொண்டு அது விஷயத்தில் எனக்கு உதவி செய்வீராக என பதில் அளித்தார்கள்.
வெறுமனே துஆவை மட்டும் நம்பி உட்கார்ந்துவிடக்கூடாது, அமல்கள் செய்வது அவசியம் என்பதை இச்சம்பவத்தில் உணர்த்துகிறார்கள்.
மேலும் அமல்களில் மிக முக்கியமானது தொழுகையாகும். தொழுகை எவ்வளவு அதிகமாக நிறைவேற்றப்படுகிறதோ அவ்வளவு சுஜூதுகள் அதிகமாகும்.
எனவே அதிகமாக சுஜூதுக்களை கொண்டு உதவி செய்வீராக என்று கூறியது. அதிகமாக தொழுது வருவீராக என்பதாகும்.
