கொழும்பில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி சூடு...! ஒருவர் பலி

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jul 23, 2026 05:21 PM GMT

வத்தளை காவல் பிரிவிற்குட்பட்ட பள்ளியவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபமொன்றிலேயே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.