திருகோணமலையில் ஒருவர் அடித்து கொலை
திருகோணமலை (Trincomalee) உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை சந்தியில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அலஸ்தோட்டத்தில் ஒரு இசை நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதில் இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக மரத்தடி பகுதியை சேர்ந்த (33 வயது) 3ம் கட்டை சந்தியில் நள்ளிரவு 3.00மணியளவில் அடித்து கொலை செய்யப்பட்டதாக சீசீ டீவி கானொளி மூலம் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உப்பு வெளி பொலிஸார் ஒருவரையும், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் ஐவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |