வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

By Raghav Aug 03, 2025 09:55 AM GMT
Raghav

Raghav

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட தனிநபர் அடையாள இலக்கத்தின் (PIN) செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தனிநபர் அடையாள இலக்கத்தின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு | Extension Of Pin Number For Tax Returns