மன்னாரில் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது
மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (08) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் திருகோணமலைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து மன்னார் நகரில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் நகர் பகுதியில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |