மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மஹ்மூத் பாடசாலை மாணவி கௌரவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று மருத்துவ துறைக்கு தகுதிபெற்ற மாணவி ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி அகில இலங்கை ரீதியில் 24ஆம் நிலையினையும் வெட்டுப்புள்ளி - 2.7617 ஐயும் பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அதி சிறப்பு "A" சித்தியினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
வரலாற்று சாதனை
முஹம்மது நெளபர் பாத்திமா ஸப்றீன் என்ற மாணவியே இவ்வாறு உயர்தர உயிரியல் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவியின் திறமையை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் முதற்கட்ட நிகழ்வு கல்லூரி முதல்வர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த பாராட்டு வைபத்தில் உயர்தர பிரிவில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம், வர்த்தகம், கலை பிரிவு மாணவிகளும் வருகை தந்திருந்தனர்.
மேலும், பாடசாலை சமூகம் சார்பாக குறித்த மாணவி உள்ளிட்ட சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
