நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மதுரோ
அமெரிக்காவில் இரண்டு நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ தற்போது தடுப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் செல்லும் வாகனப் பேரணி தற்போது பயனத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து
இந்நிலையில் வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து நாட்டில் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்டவிரோத சொத்துக்கள் வெளியேறுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், 2018 முதல் வெனிசுலா மீது விதிக்கப்பட்ட தற்போதைய தடைகளுக்கு கூடுதலாக இது உள்ளது என்று அந்த சுவிஸ் தரப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.