யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்
Jaffna
Kandy
Accident
By Dhushi
யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதி, மரதன்கடவல பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(21.07.2026) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சாரதி படுகாயம்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, தனக்கு முன்னாள் வலதுபுறம் திருப்ப முயற்சித்த பொழுது, லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், சிகிச்சைக்காக கெக்கிராவ அடிவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.