நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு
Weather
By Fathima
நாட்டில் இன்று (21) அதிகாலை வேளையில் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டாரவளையில் இன்று அதிகாலை நிலவிய குறைந்தபட்ச வெப்பநிலை 11.5°C ஆகும். பதுளை பிரதேசத்தில் நிலவிய குறைந்தபட்ச வெப்பநிலை 15.2°C ஆகப் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை
மகா இலுப்பள்ளமவில் இன்று அதிகாலை இங்கு 17.4°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை அனுராதபுரத்தில் நிலவிய குறைந்தபட்ச வெப்பநிலை 18.6°C என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.