உள்ளூராட்சி சபைகளின் 92 உறுப்பினர்களும் பல மில்லியன் ரூபாய் இழப்பீட்டை பெற்றதாக நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு
பிரதேச சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 92 முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள், ‘அரகலய’ என்ற காலிமுகத்திடல் போராட்டக் காலத்தில் அழிக்கப்பட்டதாக கூறப்படும் தங்கள் வீடுகளுக்கு இழப்பீடாக 620 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
இன்று(3) ஹொரணையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இழப்பீடு
2022 மே 9ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்கு இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை, ஏற்கனவே பெப்ரவரி 06ஆம் திகதியன்று, நளிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையின்படி, 43 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இழப்பீடாக 1.22 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.