ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்! வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் செய்யப் போவதில்லை என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விலை திருத்தம்
உலக சந்தையில் தற்போதைய ஏற்பட்டுள்ள சூழ்நிலையால், எரிவாயு விலையில் அதிகரிப்பு அவசியம் என தெரிவிக்கப்படுகின்ற போதும் இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளுக்கமைய, இந்த நேரத்தில் விலை திருத்தத்தைச் செய்ய வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, விலை திருத்தம் இன்றி, 12.5 லிட்டர் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1,482 ஆகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 694 ஆகவும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பினும், ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.