லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

Litro Gas Litro Gas Price
By Mayuri Oct 01, 2024 12:54 PM GMT

அக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு விலை

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல் | Litro Gas Price In Sri Lanka Today

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW