லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

Litro Gas Litro Gas Price
By Fathima May 02, 2023 07:10 AM GMT
Fathima

Fathima

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய விலை மாற்றம் நாளை (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு | Litro Gas Price In Sri Lanka

இதேவேளை கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now