லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

Sri Lanka Litro Gas Litro Gas Price
By Fathima May 03, 2023 08:08 AM GMT
Fathima

Fathima

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 இன்று (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும்.

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு | Litro Gas Cylinder Price Reduce

சிலிண்டரின் விலை

இதேவேளை 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now