ஊடக நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தாகும் ஆபத்து: நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள்

Tamil Media Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Social Media
By Fathima Jun 12, 2023 05:47 AM GMT
Fathima

Fathima

ஒளி - ஒலிபரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 33 ஊடக நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் இரத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சட்டமூலத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளன.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு ஊடக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

மேலும், இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

ஊடக நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தாகும் ஆபத்து: நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சிகள் | Licenses Of Media Houses Cancel

ஊடக நிறுவனங்கள்

ஊடக நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தானால், புதிய அனுமதி பத்திரத்தை பெற வேண்டும் என்றும், அப்படி புதிய அனுமதிப் பத்திரத்தை வழங்குவதா, இல்லையா என்று ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் கொண்ட ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும், ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்புவதற்கும், ஊடக நிறுவனங்களில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் இந்த சட்டமூலம் வழிவகுக்கும் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.