உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்ட அனுமதி பத்திரங்கள்!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உத்தரவானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அனுமதி பத்திரங்கள் இரத்து
தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தநிலையில், அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்ய அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |