முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lanka Egg
By Mayuri Oct 22, 2024 06:45 AM GMT

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Legal Action Against Traders Who Store Eggs

அண்மைய நாட்களில் 28 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW