தேர்தல் செலவு அறிக்கை விவகாரம்: பதில் பொலிஸ்மா விடுத்துள்ள பணிப்புரை
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இதுவரை செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1,042 வேட்பாளர்கள் மற்றும் 197 கட்சி செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழு தலைவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
விசாரணை
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேற்கண்ட பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் (31.01.2025) இற்கு முன்னர் மேற்படி விசாரணைகள் தொடர்பான சாற்றை தயாரித்து சட்டமா அதிபருக்கு ஆலோசனைக்காக அனுப்பி வைக்குமாறு அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |