நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் : சோதனைக்குட்படுத்தப்படவுள்ள சட்டத்தரணிகள்
எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்டத்தரணிகளும் இனி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று(19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சட்டத்தரணிகள் போன்று வேடமிட்டே நீதிமன்றத்துக்குள் சென்றுள்ளனர்.
புதிய சட்டம்
சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனும் வாய்ப்பைப் பயன்படுத்தியே மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆதலால், எதிர்காலத்தில் சட்டத்தரணிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |