வர்த்தகர்களுக்காக உருவாக்கப்படவுள்ள புதிய நிறுவனம் : ஜனாதிபதி அறிவிப்பு
Kandy
Sri Lanka
Tourism
Economy of Sri Lanka
By Laksi
வர்த்தகர்களின் பணிகளுக்கு வசதியாக புதிய நிறுவன அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வர்த்தகத்தை பாதித்துள்ள பல சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறை
இதன்போது, கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மாகாணத்தை சுற்றுலாத்துறையின் முக்கிய மையமாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலுயுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |