லங்கா சதொசவின் தலைவர் பதவி விலகினார்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Lanka Sathosa
Sri Lanka Presidential Election 2024
By Laksi
லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளார்.
லங்கா சதொசவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை புதிய ஜனாதிபதிக்கு வழங்கி அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகல்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து முக்கிய பதவிகளிலிருந்து பலர் விலகியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |