ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயார் - சஜித் அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 23, 2024 09:13 AM GMT
Laksi

Laksi

நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவைப்படும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் இரவு தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவை அறிவிக்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து

அநுரவுக்கு ஆதரவு

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய அநுரகுமார திசாநாயக்கவை நான் வாழ்த்துகிறேன்.

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் தயார் - சஜித் அறிவிப்பு | Sajith Ready To Support President Aura

நாட்டைப் பலப்படுத்தவும் நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு ஆதரவை வழங்குவது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன்! புதிய ஜனாதிபதி அநுர

அனைவருடனும் ஒன்றிணைந்து பொதுக் கொள்கையுடன் செயற்படுவேன்! புதிய ஜனாதிபதி அநுர

அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக லக்ஸ்மன் நிபுணராச்சி

அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக லக்ஸ்மன் நிபுணராச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW