தொடரும் மோசமான வானிலை..! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Sri Lanka TN Weather Weather
By Vinoja May 14, 2026 05:27 PM GMT

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை காலம் 2026.05.14 மாலை 4:00 மணி முதல் 2026.05.15 மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மோசமான வானிலை..! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Landslide Warning Issued For Several Districts

மட்டம் 2 - அவதான நிலை (அம்பர்)

பின்வரும் பகுதிகளில் வசிப்போர் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும்.

காலி மாவட்டம்: நெலுவ களுத்துறை மாவட்டம்: பதுரலிய, ஹோரண, மத்துகம, அகலவத்தை மற்றும் வலல்லாவிட்ட

குருணாகல் மாவட்டம்: அலவ்வ இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி

மட்டம் 1 - (மஞ்சள்) விழிப்பு நிலை

இப்பகுதிகளில் வசிப்போர் மழையுடனான காலநிலை தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

பதுளை மாவட்டம்: ஹாலி-எல, பண்டாரவளை மற்றும் பசறை

கொழும்பு மாவட்டம்: சீதாவக்கை

காலி மாவட்டம்: எல்பிட்டிய, நியகம மற்றும் தவலம

களுத்துறை மாவட்டம்: இங்கிரிய மற்றும் புலத்சிங்கள

கண்டி மாவட்டம்: தும்பனை, கங்கா இஹல கோரளை, தெல்தோட்டை, யட்டிநுவர, பன்விலை, கங்கவட்ட கோரளை, உடபலாத்தை, பஸ்பாகே கோரளை, தொலுவ, ஹரிஸ்பத்துவ, அக்குரண, பாத்தஹேவாஹெட்ட, ஹதரலியத்த, உடுநுவர மற்றும் பூஜாபிட்டிய

கேகாலை மாவட்டம்: மாவனல்லை, வரகாபொல, புலத்கொ{ஹபிட்டிய, தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, கேகாலை, ரம்புக்கணை மற்றும் அரநாயக்க குருணாகல் மாவட்டம்: நாரம்மல மற்றும் ரிதிகம மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்கை கோரளை மற்றும் ரத்தோட்டை

மாத்தறை மாவட்டம்: பிடபெத்தர மொனராகலை மாவட்டம்: படல்கும்புர, வெள்ளவாய மற்றும் பிபிலை

நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு, நோர்வூட் மற்றும் அம்பகமுவ கோரளை இரத்தினபுரி

மாவட்டம்: குருவிட்ட, கொடகவெல, கிரியெல்ல, அயகம, எஹெலியகொட மற்றும் கலவான

மலைப்பாங்கான சரிவுகளில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், ஊற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது நீர் நிறம் மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தேவைகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். உத்தியோகபூர்வ வானிலை மற்றும் மண்சரிவு அறிக்கைகளைத் தொடர்ச்சியாக அவதானிக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.