வெலிமடை - மஸ்பன்ன வீதியில் சரிந்து விழுந்த மண்மேடு!
Landslide
By Fathima
வெலிமடை - மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்மேடு நேற்று (05) மாலை சரிந்து விழுந்துள்ளது.
மண்சரிவு
மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், வெலிமடை - மஸ்பன்ன வீதியிலான பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் வீதிப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊவா - பரணகம பிரதேச சபையினால் குறித்த இடத்தில் சரிந்து விழுந்த மண் அகற்றப்பட்டு வருவதுடன், வாகனப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.