மட்டக்களப்பில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு
மட்டக்களப்பில் நீண்ட காலமாக இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள சுமார் 8.6 ஏக்கர் பரப்பளவு 56 தனி நபர்களுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கே.ஆர்.கே ஹெட்டியாரச்சி, குறித்த காணிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலைமதி பத்மராஜாவிடம் உரிய முறையில் கையளித்துள்ளார்.
இராணுவம் அறிவிப்பு
மட்டக்களப்பு - சித்தாண்டி பிரதேசத்தில் இராணுவ செயற்பாடுகளுக்காக நீண்ட காலமாக கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள காணி சுமார் 8.6 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், 56 தனி நபர்களுக்கு உரியது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்திக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்களிடம் காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.