கழிவில்லா கடற்கரை...கிண்ணியாவில் அரசாங்கத்துடன் இணைந்த மக்கள்
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ், கிண்ணியா (Kinniya) பிரதேசத்திலுள்ள திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி கடற்கரை பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட நடவடிக்கையானது, நேற்று(15) காலை முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் கடற்கரைப் பகுதிகள் சிரமாதனம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
சிரமதான நிகழ்வு
கிண்ணியா நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்களுடன், இணைந்து பொலிசாரும், கடற்படையினரும் இந்த சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கடற்கரையில் காணப்பட்ட, சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.
மேலும், இந்த சிரமதான நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர், நகர சபை செயலாளர், உறுப்பினர்கள், உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







