இஸ்ரேல் தாக்குதலில் ஆயுதக்குழு செய்தித்தொடர்பாளர் பலி! ஒப்புக்கொண்ட ஹமாஸ்
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதலில், செய்தித்தொடர்பாளர் அபு ஒபிடா உயிரிழந்துவிட்டதாக பல மாதங்கள் கழித்து ஹமாஸ் ஆயுதக்குழு இன்று ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை, அபு ஒபிடாவின் உண்மையான பெயர் ஹுஹைபா சமீர் அப்துல்லா அல் ஹலோட் என்று கூறியுள்ள ஹமாஸ், அபு ஒபிடாவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழு அறிவிப்பு
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் மே மாதம் ஆயுதக்குழுவின் தளபதி முகமது சின்வர், காசா முனையின் ரபா நகர் பிரிவு தளபதி முகமது ஷபனா, ஜுன் மாதம் மூத்த தளபதி ஹகீம் அல் இசா ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அபு ஒபிடா கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய செய்தித்தொடர்பாளரையும் ஹமாஸ் அறிவித்துள்ளது.
காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் அபு ஒபிடாவை கொன்றுவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் அறிவித்தது.
ஆனால், அபு ஒபிடா உயிரிழப்பு தொடர்பாக ஹமாஸ் ஆயுதக்குழு எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.