மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்து: பெற்றோர் ஒருவரின் துணிகர செயலால் முறியடிப்பு

Kilinochchi Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Erimalai Mar 12, 2024 08:20 AM GMT
Erimalai

Erimalai

கிளிநொச்சி முகமாலை பகுதியில், பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு குறுக்காக பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுவதால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள்  மனஉளைச்சல்

இந்நிலையில், இன்றைய தினமும் (12.03.2024) காலை 7.40 வரை எந்தவொரு பேருந்தும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பேருந்துக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.

மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்து: பெற்றோர் ஒருவரின் துணிகர செயலால் முறியடிப்பு | Kilinochi Government Bus Issue

அதேவேளை, குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8இற்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் தாமதமாக செல்லுதல் மற்றும் செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

உரிய தீர்வு  

இதனால், மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்து: பெற்றோர் ஒருவரின் துணிகர செயலால் முறியடிப்பு | Kilinochi Government Bus Issue

மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

எனவே, இந்த இடம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமாலை பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.