‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தால் 10 மில்லியன் ரூபாய் தருவதாக முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு

India
By Fathima May 04, 2023 09:13 PM GMT
Fathima

Fathima

கேரள ஸ்டோரி என்ற கேரள கதை என்ற திரைப்படத்தில் காட்டப்படும் விடயங்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிப்போருக்கு வெகுமதிகளை வழங்க, கேரளாவின் முஸ்லிம் அமைப்புக்கள் முன்வந்துள்ளன.

கேரளாவில் இருந்து இலங்கைக்கு ஊடாக ஆப்கானிஸ்தானுக்கு சென்ற பெண் ஒருவர் உட்பட்ட ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎல் அமைப்பில் பணிபுரியச் செய்யப்பட்டதாக திரைப்படத்தில் கூறப்படும் கூற்றுகளுக்கு ஆதாரங்களை தருவோருக்கே, முஸ்லீம் குழு மற்றும் தனிநபர்கள் பெரும் வெகுமதிகளை வழங்க முன்வந்துள்ளனர்.

கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று மே 5 அன்று வெளியிடப்பட உள்ளது.

‘தி கேரளா ஸ்டோரி

இந்தநிலையிலேயே கேரள மாநிலத்தில் உள்ள முஸ்லிம் குழுவொன்று, மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எல்-ல் சேர்க்கப்பட்டதாக இந்தியத் திரைப்படத்தில் கூறப்பட்டதற்கு ஆதாரங்களை கோரி, 10 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் இணைந்த முஸ்லீம் யூத் லீக் உறுப்பினர்கள், இன்று கேரளாவின் 14 மாவட்டங்களிலும் 'ஆதார சேகரிப்பு நிலையங்களை' நிறுவியுள்ளது.

இதேவேளை திரைப்படம் தொடர்பாக வெளியிடப்பட்ட முன்னோட்டத்தில்,  இந்தியாவுக்கு எதிராகத் தீட்டப்பட்ட ஒரு ஆபத்தான சதியை வெளிப்படுத்துகிறது என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

138 நிமிடங்களைக் கொண்ட இந்தப்படம் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று சிறுமிகளின் உண்மைக் கதைகளின் தொகுப்பு என்று படத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்த படத்தில் வரும் கதைகள் பொய்யானவை என்று கேரளாவின் முஸ்லிம் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கூறுகின்றன.