கந்தளையில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

Sri Lanka Police Eastern Province Crime
By Rakshana MA Jun 02, 2025 07:00 AM GMT

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிது குபா தக்கியாவின் பெயர்பலகை, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

தாக்குதல் சம்பவம்

இந்நிலையில், சம்பவத்திற்கு முந்தைய தினமான நேற்று (01) இரவு 12.00 மணியளவில், தக்கியா அருகே ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதைக் கவனித்த சில இளைஞர்கள், அவரை பின்தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கந்தளையில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் | Kantale Nameplate Unknown Persons Attack

குறித்த நபர் ஒரு வீட்டுக்குள் சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்தபோது, இளைஞர்கள் குழு அவரை சுற்றிவளைத்துள்ளது.

அதே வீட்டில் இருந்த இன்னொருவர் கத்தியுடன் வெளியே வந்ததாகவும், அவசரமாக பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு, சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கத்தியுடன் வந்த நபர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் சபை உறுப்பினர்

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் சபை உறுப்பினர்

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery