கந்தளாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Accident
By Yoosuf Jun 12, 2025 06:30 AM GMT
Yoosuf

Yoosuf

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில், காயமடைந்த நபர் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர் கந்தளாய் முதாலம் கொலனியை சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

விபத்து சம்பவம்

அவர் முதாலம் கொலனி பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு திரும்ப முடபட்டபோது , எதிரே வேகமாக வந்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் வீதி பாதுகாப்பு பொலிஸார் இல்லாத காரணத்தால், அண்மைக்காலமாக விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதனால் பொதுமக்கள் இந்த வீதியில் போக்குவரத்து ஒழுங்கமைப்பை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் வீதியில் பயணிக்க அச்சப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery