கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை

Kandy Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 26, 2025 06:13 AM GMT
Fathima

Fathima

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.