ஹொரண அரச வங்கியில் துணிகரம் : 3 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் கொள்ளை!

Sri Lanka Police Kalutara Crime Sri Lanka Banks
By Vinoja Jun 03, 2026 06:00 PM GMT

களுத்துறை மாவட்டத்தின் ஹொரண நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் பணம் வைக்கப்பட்டிருந்த பணப்பை ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹொரண அரச வங்கியில் துணிகரம் : 3 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் கொள்ளை! | Kalutara Horana Bank Cash Bag Robbery 3 Crore

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணப்பையில் 3 கோடி ரூபாவிற்கும் அதிகளவிலான பணம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.