கல்முனையில் தேசிய ரீதியாக சாதனைக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

Rakshana MA
கடந்த 2023ஆம் ஆண்டில் சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 2வது இடத்தை பெற காரணமாக அமைந்த அனைத்து ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா கல்முனையில் நடைபெற்றுள்ளது.
இந்த கௌரவப்படுத்தும் விழாவானது கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.
பல் கலை நிகழ்வுகள்
கல்முனை கல்வி வலயம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாக அமைந்த 500 க்கும் அதிகமான ஆசிரியர்கள், அதிபர்கள், பாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் நற்சான்று பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்தும் இந்த நகழ்வில் மாணவர்களின் பல்லின கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பீ. காப்தீபன் கலந்து கொண்டார்கள்.
மேலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாட இணைப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








